கங்கைகொண்டான் கோயிலில் சுந்தரசுவாமிகளுக்கு சிறப்பு பூஜை
திருநெல்வேலி: கங்கைகொண்டான் ஆனந்தவல்லி சமேத கைலாசநாதர் கோயிலில் கோடகநல்லுார் சுந்தர சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கங்கைகொண்டானில் அவதரித்த சுந்தர சுவாமிகள், கநல்லுாரில் வாழ்ந்ததால், பக்தர்கள் அவரை கநல்லுார் சுந்தர சுவாமிகள் என அழைத்தனர். சுவாமிகள் கங்கைகொண்டான் ஆனந்தவல்லி சமேத கைலாசநாதரின் தீவிர பக்தராக திகழ்ந்தார். இந்நிலையில் சுந்தர சுவாமிகள் பக்தர்கள் சார்பில் கங்கைகொண்டான் ஆனந்தவல்லி சமேத கைலாசநாதரின் கோயிலில் சுந்தர சுவாமிகள் சிலைக்கு சிறப்பு பூஜை நடந்தது. வழிபாட்டில் பாஜ., நெல்லை மாவட்ட தலைவர் வக்கீல் மகாராஜன், ஆன்மிக வாதிகள், பக்தர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கங்கைகொண்டான் பிராமண சங்க தலைவர் ஆதிநாராயணன், பாஜ., மாவட்ட தலைவருக்கு பிரசாதம் வழங்கினார். ஏற்பாடுகளை கோடகநல்லுார் சுந்தர சுவாமிகளின் பக்தர்கள் செய்திருந்தனர்.