உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளியங்கிரி கோவிலில் வெளியில் நின்று வணங்கிய பக்தர்கள்

வெள்ளியங்கிரி கோவிலில் வெளியில் நின்று வணங்கிய பக்தர்கள்

 தொண்டாமுத்தூர்: பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கோவிலுக்கு வெளியே நின்று வழிபட்டு சென்றனர். கொரானா தொற்று பரவலை கட்டுபடுத்த, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாளான நேற்று, பலரும் குடும்பத்துடன், பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று, வெள்ளியங்கிரி ஆண்டவரை வழிபட்டு சென்றனர். கோவை குற்றாலத்தில், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !