காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1502 days ago
காரைக்கால் : காரைக்கால் அம்மையார் அவதரித்த நாளை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.அறுபத்து மூன்று நாயன்மார்களின் ஒருவரான, புனிதவதி என்ற காரைக்கால் அம்மையாருக்கு, காரைக்காலில் தனி கோவில் உள்ளது. இவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில், ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா விமரிசையாக நடக்கிறது.நேற்று அம்மையார் அவதரித்த ஆவணி கிருத்திகை நட்சத்திர தினத்தை யொட்டி, அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதிகாலையில் மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.