சாத்தூர் திரு இருதய ஆலய தேர்ப்பவனி!
ADDED :4967 days ago
சாத்தூர்: சாத்தூர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள இயேசுவின் திருஇருதய ஆலயம் 108 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.108 வது ஆண்டவர் பெருவிழா ஜூன் 15 தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு ஆலயத்தில் தினமும் மாலையில் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடந்தது.சனிக்கிழமை மாலை 6.30க்கு பாதிரியார் சாமிநாதன் மற்றும் குருக்கள் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது,பின்னர் இரவில் தேர்பவனி நடந்தது.இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை 8.30 மணிக்கு பாதிரியார் பால்பிரிட்டோ தலைமையில் சிறப்புத்திருப்பலியும், கொடியிறக்கமும் நடந்தது. சாத்தூர் பங்கு தந்தை பிரிட்டோசுரேஷ் தலைமையில் விழாக்குழுவினர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.