உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குணசீலம் பெருமாளுக்கு 1,008 குட பால் அபிஷேகம்

குணசீலம் பெருமாளுக்கு 1,008 குட பால் அபிஷேகம்

திருச்சி: குணசீலம் வெங்கடாஜலபதிக்கு, 1,008 குட பால் அபிஷேகம் நேற்று சிறப்பாக நடந்தது. திருச்சியை அடுத்த குணசீலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், "தென் திருப்பதி என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறது. திருப்பதி வெங்கடாஜலபதிக்கு நேர்த்திக்கடன் செலுத்த முடியாத பக்தர்கள் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பிரசித்திப்பெற்ற குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில், மஹா சாந்தி திருமஞ்சனம் நேற்று நடந்தது. முன்னதாக, பிரசன்ன வேங்கடேச சேவா சமிதியினர் மற்றும் பக்தர்கள், 1,008 குடங்களில் பால் எடுத்துக்கொண்டு, மேள, தாளங்களுடன் கோவில் பிரகாரத்தை வலம் வந்தனர். அதன்பின், கோவில் உற்சவர் பெருமாளுக்கு, 1,008 குட பாலில் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்விக்கப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அலங்கார, தீபராதனைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !