ராமநாதபுரத்தில் வெளியே நின்று தரிசித்த பக்தர்கள்
ADDED :1527 days ago
ராமநாதபுரம் : சனிபிரதோஷத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் நந்திக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் நடந்தது. ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி உட்பிரகாரத்தில் வலம் வந்தனர்.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு பக்தர்களுக்கு அனுமதியில்லை. இருப்பினும் சிவன்கோயில வாசலில் நின்று பக்தர்கள் பலர் சாமி கும்பிட்டனர்.இதே போல பிறகோயில்களிலும் பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் ஏமாற்றம் அடைந்துஉள்ளனர்.