கனி தரும் மரம்!
ADDED :1602 days ago
பணக்காரர் ஒருவர் தன் வீட்டை சுற்றி உள்ள ஏழைகளுக்கு உதவி செய்து வந்தார். இதனை அறிந்த பலர் அவர் வீட்டின் முன்பு குவிய ஆரம்பித்தனர். கோபம் அடைந்த அவர், உதவி கேட்டு வருபவர்களை விரட்டினார். ஒருநாள் அவரது கனவில், ‘மகனே! காய்த்த மரங்களைத் தேடிதான் பறவை வரும். உன்னை கனி தரும் மரமாய் வைத்திருக்கிறேன். நீ பலருக்கும் உதவி செய்ய வேண்டும்’ என்றது ஒருகுரல். இதைக்கேட்டவுடன் அவருக்கு கண்ணீர் வந்தது. மீண்டும் பலருக்கு உதவி செய்ய ஆரம்பித்தார்.
உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உபசரித்து, கனி தரும் மரமாய் இருங்கள்.