பாவத்தொழில் செய்யாதீர்
ADDED :1603 days ago
‘வட்டி ஒரு கொடூரமானது’ என்பதை எல்லோரும் அறிவர். உலக நாடுகள் இந்த வட்டியை மையமாக வைத்தே இயங்கி வருகின்றன. ஏழை நாடுகளின் வட்டியை வைத்தே சில நாடுகள் பிழைக்கிறது. சிலர் வட்டியை மட்டுமே வருவாயாக வைத்து குடும்பம் நடத்துவர். இது பாவமாகும்.
ஒருமுறை வானுலகம் சென்ற நாயகம், சிலர் கூட்டமாக நிற்பதைக் கண்டார். அவர்களது வயிறு கண்ணாடி போல காட்சியளித்தது. அதற்குள் பாம்புகள் வளைந்து கொண்டிருந்தன. அங்கிருந்த வானதுாதரிடம் இதற்கான காரணம் பற்றி கேட்டார்.
“பாவத்தொழிலான வட்டி வாங்கி வாழ்க்கை நடத்தியவர்கள் இவர்கள்” என பதில் கிடைத்தது.
வட்டியால் கிடைக்கும் லாபம் இனிக்கலாம். ஆனால் இறந்த பிறகு, வட்டி கட்டியவரின் வயிற்றெரிச்சல் பாம்புகளாய் மாறி வயிற்றில் குடியேறி வசிக்கும். எனவே பாவத்தொழிலை ஒருபோதும் செய்யாதீர்கள்.