அகத்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED :1518 days ago
அச்சிறுப்பாக்கம்: கீழாமூர் அகத்தீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கீழாமூர் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட இக்கோவிலை, அப்பகுதி மக்கள் நன்கொடை வசூலித்து, கோவிலை புனரமைத்தனர்.திருப்பணி முழுமை அடைந்ததையடுத்து, மஹா கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. நான்காம் கால வேள்வியை தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, விமான கோபுர கலசத்திற்கு, சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடத்தினர். சுற்று வட்டார மக்கள் ஏராளமானோர் வந்து, சுவாமியை தரிசித்து சென்றனர்.