தடையை மீறி சிலைகள்
ADDED :1589 days ago
மதுரை - விநாயகர் சதுர்த்தியான நேற்று பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அரசு தடைவிதித்திருந்தது. மதுரையில் தடையை மீறி ஹிந்து முன்னணி சார்பில் கீரைத்துறை, கரிமேடு, ஆனையூர் உட்பட 56 இடங்களில் சிலைகள்வைக்கப்பட்டன. நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவுசெய்தனர். சிலைகள் வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன.