ராமேஸ்வரம் அக்னி கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு
ADDED :1528 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஹிந்து முன்னணியினர் 13 விநாயகர் சிலைகளை கரைத்தனர்
விநாயகர் சதுர்த்தி யொட்டி ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம, மண்டபத்தில் இந்து முன்னணியினர் 36 நாகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தனர். விநாயகர் சதுர்த்தி விழா முடிந்த நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் பல தெருவில் பூஜை செய்த 13 விநாயகர் சிலைகளை ஹிந்து முன்னணியினர், பக்தர்கள் வாகனத்தில் ஏற்றி கொண்டு ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் வைத்தனர். பின் விநாயகர் சிலைக்கு மகா தீபாராதனை செய்தும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் அடுப்பில் சிலைகளை கரைத்தனர்.