மக்களை கவர்ந்த தடுப்பூசி விநாயகர் சிலை
ADDED :1496 days ago
பாகல்கோட்: பாகல்கோட் இளகல்லில் உள்ள ஓவிய கலைக்கல்லுாரி சார்பில் 26 ஆண்டுக்கும் மேலாக வித்தியாசமான விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. அது போல இந்த ஆண்டு வித்தியாசமான தடுப்பூசி விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது 1,500க்கும் மேமற்பட்ட ஊசிகள், 400க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 50 மாணவர்கள் 48 மணி நேரத்தில் இதை உருவாக்கி உள்ளனர். இந்த வித்தியாசமான விநாயகர் சிலை பொது மக்களை கவர்ந்துள்ளது.