சின்னகடம்பூரில் ஜாத்திரை விழா
ADDED :1583 days ago
திருத்தணி திருத்தணி ஒன்றியம், சின்னகடம்பூர் மோட்டூர் கிராமத்தில் கங்கையம்மன் கோவில் ஜாத்திரை விழா நேற்று நடந்தது.இதையொட்டி, எல்லையம்மனுக்கு காலையில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மாலை, கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.இரவு 7:00 மணிக்கு பூ கரகத்துடன் களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 10:00 மணிக்கு கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், நாடகமும் நடந்தது.