பாலையூர் லக்ஷ்மி நாராயண பெருமாள், கோதண்டராமர் சுவாமி கோயில் சம்ப்ரோட்சணம்
மயிலாடுதுறை: பாலையூர் லக்ஷ்மி நாராயண பெருமாள் கோதண்டராமர் சுவாமி கோயில் சம்ப்ரோட்சணம் நடந்தது.
குத்தாலம் அருகே பாலையூர் லக்ஷ்மி நாராயண பெருமாள் கோதண்டராம சுவாமி கோயில் திருப்பணிகள் முடிந்து அஷ்டபந்தன மகா சம்ப்ரோட்சணம் நடந்தது. இதையொட்டி கடந்த 14ம் தேதி மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கி நேற்று காலை நான்கு கால பூஜைகள் முடிந்து பூர்ணாஹுதி ஆகி புனித நீர் நிரம்பிய கெடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து விமானம் மற்றும் மூலவர்க்கு மகா சம்ப்ரோட்சணமும் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தது. பின்னர் மாலை 5 மணி அளவில் சீதாராமர் திருக்கல்யாண மகோத்சவம் சிறப்பாக நடைபெற்றது. சம்ப்ரோட்சண நிகழ்ச்சிகளை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நேரிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் இணையதள நேரலையிலும் கண்டு பெருமாளின் அருளை பெற்றனர். சம்ப்ரோட்சணத்தை பட்டாச்சாரியார்கள் சம்பத், ஸ்ரீராம், கோகுலகிருஷ்ணா,(பரம்பரை ஸ்தானிக கோயில் அர்ச்சகர்) ஆகியோர் நடத்தி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, தக்கார் மற்றும் ஆய்வாளர் ஹரிசங்கர் மற்றும் கிராம வாசிகள் செய்து இருந்தனர்.