குருஞ்சாருடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1493 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனக்கோட்டை குருஞ்சாருடைய அய்யனார் கோவில், கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர ஆராதனை, எஜமான சங்கல்பம், அனுக்ஞை, கணபதி ஹோமம், லட்சுமி, துர்கா ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவைகள் நடைபெற்றன. தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, தீபாரதனை நடைபெற்றன. பின்பு யாகசாலையில், பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பரிகார தெய்வங்களான பட்டாபிஷேக ராமர், சிவன், விநாயகர், சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. விழாவில் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை காவனக்கோட்டை கிராமத்தினர் செய்திருந்தனர்.