உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மைசூரு தசரா யானைகளுக்கு சிகிச்சை: அனுபவ டாக்டர்கள் இல்லை

மைசூரு தசரா யானைகளுக்கு சிகிச்சை: அனுபவ டாக்டர்கள் இல்லை

மைசூரு: தசரா ஜம்பு சவாரியில் பங்கேற்கும் யானைகளுக்கு, ஒத்திகை நடக்கிறது. ஊட்டச்சத்தான உணவு அளிக்கப்படுகிறது. ஆனால், யானைகளுக்கு சிகிச்சையளிக்க, அனுபவமிக்க டாக்டர்கள் இல்லை .

மைசூரு தசராவில் பங்கேற்கும் யானைகளின் ஆரோக்கியத்தை, தினமும் கவனித்து, சிகிச்சையளிக்க வேண்டும். யானைகளுக்கு காய்ச்சல், வயிற்று போக்கு அறிகுறிகள் இருந்தால், உணவில் மாத்திரைகள் சேர்த்து கொடுக்க வேண்டும். இதற்காகவே கால்நடைத்துறை டாக்டர்களை வனத்துறை நியமித்திருந்தது. இம்முறை தசராவுக்கு
முன்பே , இந்த டாக்டர்களை சொந்த துறைக்கு இடம் மாற்றி, புதியவர்களை நியமித்ததால், பாகன்கள் அதிருப்தியடைந்துள்ளனர். வனத்தின் அமைதியான சூழ்நிலைக்கு பழகியுள்ள யானைகள், தசரா நேரத்தில் நகருக்கு வருகின்றன. மக்கள் நெருக்கடி, வாகனங்களின் சத்தத்துக்கு பொருந்தும்; உணவும் கூட மாறும். இதனால், யானைகளின் ஆரோக்கியத்தில்
பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே , தினமும் அரண்மனை வளாகத்தில், யானைகளின் நடவடிக்கையை கண்காணித்து பரிசோதித்து சிகிச்சையளிக்க, அனுபவமிக்க டாக்டர்கள் வேண்டும். இதுவரை டாக்டர் நாகராஜ், தசரா யானைகளின் பொறுப்பை பார்த்துக்கொண்டிருந்தார். 21 ஆண்டுகளாக இப்பணியில் இருக்கிறார். டாக்டர் முஜீப் எட்டு ஆண்டுகளாக, தசரா யானைகளுக்கு சிகிச்சையளிக்கிறார். பல்வே று இடங்­களில், யானை, புலிகளை பிடிக்கும் நடவடிக்கையில், இவர் முக்கிய பங்கு வகித்தார். தற்போது நாகராஜ் கால்நடைத்துறைக்கும், முஜீப் நாகரஹொளேவுக்கும் மாற்றப்பட்ட னர். இதற்கு முன் பல ஆண்டுகள், யானைகளுக்கு சிகிச்சையளித்து, ‘யானை டாக்டர் என்றே அழைக்கப்பட்ட சிட்டியப்பாவையும், இது போன்று இடம் மாற்றியது. தசரா யானைகளின் ஆரோக்கியத்தை கவனிக்க, இளம் டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது சமூக ஆர்வலர்கள், பாகன்கள், உதவியாளர்களுக்கு அதிருப்தியளித்துள்ளது. அனுபவமிக்க டாக்டர்களை நியமிக்கும்படி வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !