ராமேஸ்வரத்தில் சர்வரோக நிவாரண யாகம்
ADDED :1486 days ago
ராமேஸ்வரம்: உலக மக்கள் கொரோனா நோயில் இருந்து விடுபட வேண்டி ராமேஸ்வரம் காஞ்சி மடத்தில் சர்வரோக நிவாரண யாக பூஜை நடந்தது.
உலக மக்கள் கொரோனா நோயில் இருந்து விடுபட்டு நீடூழி வாழ வேண்டிய நேற்று ராமேஸ்வரம் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் ஒரு குண்டத்தில், மகாராஷ்டிரா வேத விற்பன்னர்கள் 7 பேர், வேத மந்திரம் முழங்க சர்வ ரோக நிவாரண யாக பூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து நடந்த மகாதீபாராதனையில் ராமேஸ்வரம் காஞ்சி மடம் நிர்வாகி சாச்சா, புரோகிதர்கள், பக்தர்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.