மண்பாண்டச் சமையல் ஏன்?
ADDED :1552 days ago
பீமன் என்னும் குயவன் தினமும் திருப்பதி ஏழுமலையானுக்கு மண்ணால் பூக்கள் செய்து வழிபட்டு வந்தான். அவனது பக்திக்கு மனம் இரங்கிய சுவாமி, மன்னரான தொண்டைமான் சக்கரவர்த்தியின் கனவில் தோன்றினார். “ மன்னா! தினமும் நீ அளிக்கும் தங்க மலர்களை விட குயவன் பீமன் தரும் மண்மலர் மீது எனக்கு விருப்பம் அதிகம்” எனத் தெரிவித்தார். இதன்பின் பீமனுக்கு பொருளுதவி செய்தார் மன்னர். இந்த பீமனைப் பெருமைப்படுத்தும் விதத்தில் இன்றும் ஏழுமலையானுக்கு தயாராகும் நைவேத்யங்கள் மண்பாண்டங்களில் தயாராவது குறிப்பிடத்தக்கது.