உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளி கதாயுதம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு காணிக்கை

வெள்ளி கதாயுதம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு காணிக்கை

ஹாவேரி : முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு அளிக்கப்பட்ட வெள்ளி கதாயுதத்தை, அமைச்சர் பி.சி.பாட்டீல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார்.

முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகஸ்ட் 28ல், ஹாவேரி அருகே உள்ள ஹிரேகரூர் நகருக்கு சென்று பல்வேறு வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்தார். அப்போது முதல்வருக்கு வேளாண் துறை அமைச்சர் பி.சி. பாட்டீல் வெள்ளி கதாயுதம் பரிசளித்தார்.இந்த கதாயுதத்தை பேடகி அருகே உள்ள கதரமண்டலகி ஆஞ்நேயர் கோவிலுக்கு பரிசாக அளிக்கும் அமைச்சரிடம் முதல்வர் கூறி இருந்தார். அதன்படி நேற்று அக்கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து கதாயுதத்தை காணிக்கையாக அளித்தார்.பேடகி பா.ஜ., - எம்.எல்.ஏ., விருபாஷ ப்பா, உள்ளூர் பா.ஜ., பிரமுகர்கள் உடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !