உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா: சிறப்பு பூஜை

அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா: சிறப்பு பூஜை

 முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே மேலப்பண்ணைக்குளம் கிராமத்தில் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. கடந்த மாதம் மண்குதிரை செய்ய பெருங்கரணை கிராமத்தில் பிடிமண் வழங்கப்பட்டது. புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்காப்புக்கட்டி பக்தர்கள் விரதம் இருந்தனர். பெருங்கரணை கிராமத்தில் தயார் செய்யப்பட்ட குதிரை,தவளும் பிள்ளை உருவத்தை ஊர்வலமாக கிராமமக்கள் எடுத்து வந்தனர். அய்யனார் கோயிலில் வைத்து குதிரை, தவளும் பிள்ளைகளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !