கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :1527 days ago
கன்னியாகுமரி: கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதனை சமூகஇடைவெளியுடன் பக்தர்கள் கண்டு வணங்கினர்.
கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகில் பழமை வாய்த குகநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி திருவாதிரை நட்சத்திரத்தன்று சங்காபிஷேகம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று புரட்டாசி திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.