உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் உண்டியலில் ரூ.9.54 லட்சம் காணிக்கை

கோவில் உண்டியலில் ரூ.9.54 லட்சம் காணிக்கை

பவானி: பவானி, கூடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள, அனைத்து சன்னதியில் உள்ள உண்டியல்களும் நேற்று திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் சங்கமேஸ்வரர் கோவில் உண்டியலில், 8.54 லட்சம் ரூபாய், காசி விஸ்வநாதர் கோவிலில், 6,??? ரூபாய், பழனியாண்டர் கோவிலில், 44 ஆயிரம் ரூபாய், பசு பராமரிப்புக்கு, 28 ஆயிரம், 10 ஆயிரம் காணிக்கை, 32 கிராம் தங்கம், 180 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. மொத்தம், 9.54 லட்சம் ரூபாய் காணிக்கை, கோவில் கணக்கில் கனரா வங்கியில் செலுத்தப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !