சுகவனேஸ்வரர் கோவில் நிலம் 90 ஏக்கர் அளவீடு
ADDED :1578 days ago
சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக, அழகாபுரம்புதூரில், 112.80 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு ஆக்கிரமிப்பு உள்ளதா என்பதை அறிய, ரோவர் கருவி மூலம், கடந்த, 14 முதல், நில அளவீடு செய்யும் பணி தொடங்கியது. நேற்று வரை, 90 ஏக்கர் நிலம் அளவீடு பணி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில், இப்பணி முழுதும் முடியும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.