கானியப்ப மசராய பெருமாள் கோவிலில் சங்காபிஷேக விழா
ADDED :1476 days ago
சூலூர்: நாகம நாயக்கன் கானியப்ப மசராயர் பெருமாள் கோவிலில், 1008 சங்காபிஷேக விழா நடந்தது.
சூலூர் அடுத்த நாகம நாயக்கன் பாளையத்தில் உள்ள ஸீ ஸ்ரீ கானியப்ப மசராயர் பெருமாள் கோவில் பழமையானது. இங்கு, புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ஏகாதசியை ஒட்டி,, 1008 சங்காபிஷேக விழா நடந்தது. காலை, 4:00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் விழா துவங்கியது. காலை, 6:30 மணிக்கு, கலைமகள், தன்வந்திரி, சுதர்ஸன ஹோமங்கள் நடந்தன. சுப்பிரமணியர் மற்றும் நவக்கிரஹ ஹோமங்கள் தொடர்ந்து நடந்தன. காலை, 8:30 மணிக்கு, ஸ்ரீ காளாத்தா மாயாத்தா சமேத கானியப்ப மசராய பெருமாளுக்கு, 1008 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பஜனை, மகாதீபாராதனை, தாசர்கள் வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.