ராமரின் வில்லுண்டி தீர்த்தத்தில் குவிந்த பக்தர்கள்
ADDED :1476 days ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே ராமர் உருவாக்கிய வில்லுாண்டி தீர்த்தத்தை ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்தனர்.
ராமாயண வரலாற்றில், இலங்கையில் இருந்து சீதையை மீட்டு ராமர் கடல் வழியாக ராமேஸ்வரம் வந்த போது, சீதைக்கு தாகம் ஏற்படுகிறது. உடனே ராமர் கடலில் அம்பு எய்ததும் குடிநீர் பீறிட்டு வெளியேறியது. இதனைப் பருகி அனைவரும் தாகம் தணித்ததாக கூறப்படுகிறது.இதனால் இதற்கு வில்லுாண்டி தீர்த்தம் என பெயரிட்டனர். ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் தண்ணீர்ஊற்று கிராம கடற்கரையில் இருந்து 60 மீட்டர் தூரத்தில் கடலுக்குள் அமைந்துள்ள இத்தீர்த்தத்தை பக்தர்கள் பருகி தரிசிக்கின்றனர்.நேற்று ராமேஸ்வரம் கோயிலில் தரிசிக்க முடியாததால், ஏராளமான பக்தர்கள் வில்லுாண்டி தீர்த்தத்தில் குவிந்தனர்.