உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் முடி காணிக்கை செலுத்த கொட்டகை

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் முடி காணிக்கை செலுத்த கொட்டகை

கடலுார் : திருவந்திபுரம் கோவிலில் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்த வசதியாக கொட்டகை அமைக்கப்படுகிறது.

கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை நடக்கும் சிறப்பு வழிபாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, முடிகாணிக்கை செலுத்தி, தரிசனம் செய்வர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் அனுமதிக்கவில்லை. பிற நாட்களில் பக்தர்கள் வந்து முடிகாணிக்கை செலுத்தி வழிபட்டு சென்றனர்.கடந்த மூன்று புரட்டாசி சனிக்கிழமைகளாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கவில்லை. மூன்றாம் சனிக்கிழமையான நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முடிகாணிக்கை செலுத்திச் சென்றனர்.இந்நிலையில், பக்தர்களின் நலன் கருதியும், சமூக இடைவெளியை பின்பற்றவும், முடிகாணிக்கை செலுத்த வசதியாக கோவில் அருகே தகர கொட்டகை அமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !