மஞ்சளிலோ, சாணத்திலோ பிள்ளையாரைப் பிடித்து வைக்கிறோமே ஏன்?
ADDED :1506 days ago
விநாயகரே முழுமுதற்பொருள். அதனால், எந்த நிகழ்ச்சியிலும் முதல்வழிபாடு அவருக்குத் தான். சித்திரமாகவோ, சிலையாகவோ வைத்து வழிபடாத அந்தக் காலத்தில் உடனடியாக விநாயகமூர்த்தியை இவ்விதமாக உருவாக்கி வழிபட்டனர். பிடிச்சு வைச்சா பிள்ளையார் என்ற சுலவடை இதனால் உண்டானது தான். நம்பிக்கையை மஞ்சளிலோ, சாணத்திலோ வைத்தாலே போதும், தும்பிக்கையான் அதனுள் எழுந்தருளி விடுவான்.