வரன் என்றால் என்ன?
ADDED :1505 days ago
என் பொண்ணுக்கு வரன் பார்க்கிறேன் என்று மாப்பிள்ளை தேடும் படலத்தை குறிப்பிடுவர். வரன் என்ற சொல்லுக்கு தலைசிறந்தவன் என பொருள். பலருள் ஒருவனைப் பெண் தானே தேர்ந்தெடுப்பதற்கு சுயம்வரம் என்று பெயர். ராஜகுமாரிகள் இந்த நடைமுறையைப் பின்பற்றினர். சீதை ராமனையும், தமயந்தி நளனையும் இவ்வாறே தேர்ந்தெடுத்தனர். வரணம் என்ற சொல்லே வரன் என்றானது. இந்த வார்த்தையை திருமணத்திற்கு மட்டுமல்லாமல் மற்ற விஷயங்களுக்கும் குறிப்பிடுவர். சீடன் நல்ல குருவைத் தேர்ந்தெடுப்பதற்கு குருவரணம் என்றும், குரு நல்ல சீடனை தேடுவதற்கு சிஷ்யவரணம் என்றும் பெயர். உலக வாழ்க்கையை கைவிட்டு, ஒருவன் ஆத்மாவைத் தேர்ந்தெடுத்து கடவுளோடு ஒன்றிவிடுவதை விவரணம் என்று உபநிஷதம் கூறுகிறது. மனித வாழ்க்கையே ஒரு தேடுதல் தான். நாம் அதில் சிறப்பானதைத் தேர்ந்தெடுக்க வேண்டியது ரொம்ப அவசியம்.