ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
ADDED :1494 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை கொடிப்பட்டம் மாட வீதிகள் சுற்றி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ரகுராம பட்டர் கொடி பட்டம் ஏற்றினார். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் கோயில் வளாகத்தில் காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், சேவா கால பூஜையும் நடைபெறுகிறது. விழாவில் தக்கார் ரவிச்சந்திரன். செயல் அலுவலர் இளங்கோவன், ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமேஷ், அரையர் பாலமுகுந்தன் மற்றும் கோயில் பட்டர்கள் பங்கேற்றனர்.