திருப்பதி பிரம்மோற்சவம் : சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப ஸ்வாமி
ADDED :1561 days ago
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் காலையில் சின்ன சேஷ வாகன சேவை நடந்தது.
திருமலையில் ஏழுமலையானுக்கு நேற்று முன்தினம் முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று காலை சின்ன சேஷ வாகன சேவை நடந்தது. மகாவிஷ்ணுவிற்கு சேஷன் வஸ்திரமாக, ஆபரணமாக, படுக்கையாக என அனைத்துமாக இருந்து சேவை செய்து வருகிறார். அதனால் பிரம்மோற்சவத்தின் போது முதல் இரண்டு வாகன சேவை ஆதி சேஷனுக்காகவும், வாசுகிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.அதன்படி இரண்டாம் நாளான நேற்று காலை, மலையப்ப ஸ்வாமி சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்தில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். மாலையில் அன்னப்பறவை வாகனத்தில் மலையப்ப ஸ்வாமி எழுந்தருளினார்.