இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நவராத்திரி ஊஞ்சல் சேவை
ADDED :1821 days ago
மதுரை: இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரி 2ம் நாளில் ஊஞ்சல் சேவையில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டிஎஸ்கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்1431 பசலி நவராத்திரி உற்சவம் இரண்டாம் நாள்(அக்.8) ஊஞ்சல் அலங்காரத்தில் மத்தியபுரி அம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.