வேண்டாமே வெளிவேஷம்
ADDED :1496 days ago
நாயகம் ஒருமுறை செல்வந்தர் நண்பர் ஒருவரை பார்க்க சென்றார். அப்போது அவர் தரமற்ற ஆடைகளை அணிந்திருப்பதை பார்த்தவர், “நீங்கள் பணக்காரர் தானே” எனக் கேட்டார்.
“ஆம்” என்றார்.
‘‘இவ்வளவு செல்வங்களை கொடுத்திருந்தும், ஏன் கஞ்சத்தனமாக இருக்கிறீர்கள்’’ எனக்கேட்டார்.
நம்மிடம் செல்வம் அதிகமாக இருந்தால் அதை நாலு பேருக்கு கொடுத்து உதவ வேண்டும். உங்களிடம் இருந்தும் இல்லாதவன் போல் வெளிவேஷம் செய்யாதீர்கள். அது நல்லதல்ல.