உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமாதானம் என்னும் ஆயுதம்

சமாதானம் என்னும் ஆயுதம்


முதல் அணுகுண்டை தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார் டாக்டர் ராபர்ட் ஒப்பன் ஹீமர். இவர் ஒருநாள் அணுகுண்டு சம்பந்தமாக அமெரிக்க செனட் சபையில் விளக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது ஒருவர், ‘மனித இனத்துக்கே அழிவைத்தரும் பயங்கரமான ஆயுதத்தை கண்டுபிடிக்கிறீர்களே... இதிலிருந்து தப்ப ஏதாவது ஆயுதம் உண்டா..’ என கேட்டார்.
‘ஓ... இருக்கிறதே’ என்றார்.  
‘என்ன ஆயுதம் அது’ என்று ஆர்வமாக கேட்டார் மற்றொருவர்.
ஹீமர் சிரித்தபடியே, ‘சமாதானம்’ என்று சொன்னார்.
இன்று நாடுகளுக்கு இடையே யுத்தங்கள் நடக்கின்றன. அது மட்டுமா.. நாடுகளுக்குள்ளே பல்வேறு முரண்பாடுகளால் பல பிரச்னைகள் எழுகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சவாலான காரியமாக உள்ளது. இதற்கு சரியான தீர்வு சமாதானம் ஒன்றே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !