தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி ஒன்பதாம் நாள் நிகழ்ச்சி
ADDED :1512 days ago
தஞ்சாவூர்: தஞ்சாவூர், நகர மையம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியில் துர்கா பூஜையில் நவமி தினத்தன்று மாலையில் சுவாமி வேதாந்தா ஆனந்தா அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு நடந்தது. பிறகு மாற்றுத்திறனாளிகளான திருமங்கலக்குடி திரு. ஜி. கார்த்திக் அவர்கள் வயலின் வாசிக்கவும், குடந்தை சரவணன் மிருதங்கம் வாசிக்கவும் அருமையான இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம மையத்தில் மாணவ- மாணவிகளின் ஓவியம் வரையும் திறமை வெளிப்படுத்துவதற்காக போட்டி நடத்தினோம். சுமார் 50 குழந்தைகள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.