ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம்: சிறுவர், சிறுமியர் உற்சாகம்
ADDED :1512 days ago
சூலூர்: காங்கயம் பாளையம் ஐயப்பன் கோவிலில் நடந்த வித்யாரம்ப பூஜையில் ஏராளமான குழந்தைகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
நவராத்திரியின் வெற்றி திருநாளான விஜய தசமி கொண்டாடப்பட்டது. சூலூர் சுற்றுவட்டார கோவில்களில் வித்யாரம்ப பூஜை நடந்தது. சூலூர் அடுத்த காங்கயம் பாளையம் ஐயப்பன் கோவில் நடந்த வித்யாரம்பம் எனும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சியில் ஏராளமான சிறுவர், சிறுமியர் உற்சாகத்துடன் பங்கேற்றனர். தாம்பாளத்தில் அரிசியை பரப்பி, குழந்தையின் கை விரலை, பெற்றோர் பிடித்து எழுத்துகளை எழுத கற்றுக் கொடுக்கப்பட்டது. குழந்தையின் நாக்கில் தேன் தடவி எழுத்தறிவிக்கப்பட்டது. சூலூர் சுற்றுவட்டாத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கப்பட்டது. முன்னதாக, அதிகாலையில், ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன.