அய்யனார் கருப்பசாமி கோயிலில் சிலைகள் எடுப்பு திருவிழா
ADDED :1457 days ago
திருமங்கலம் : திருமங்கலம் அருகே வாகைகுளம் அய்யனார் கருப்பசாமி கோயிலில் புரட்டாசி பொங்கலையொட்டி நேர்த்திக்கடனாக சிலைகள் எடுக்கும் திருவிழா நடந்தது.
இங்கு வேண்டுதல் நிறைவேறிய பின் வேண்டுதலையே பக்தர்கள் சிலையாக செய்து நேர்த்திக்கடன் செலுத்துவர். ஒரு மாதமாக இந்த சிலைகள் செய்யும் பணி நடந்தது. நேர்த்திக்கடனாக ராணுவ வீரர், போலீஸ், குதிரை, மணப்பெண், மணமகன், ஆடு, மாடுகள் உள்ளிட்ட விதவிதமான சிலைகளை பக்தர்கள் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக ஊர் முத்தாலம்மன் கோயிலில் இருந்து சிலைகளுடன் ஊர்வலமாக அய்யனார் கருப்பசாமி கோயிலுக்கு வந்தனர்.