உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் விஜயதசமி அம்பு விடும் விழா

மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் விஜயதசமி அம்பு விடும் விழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூரில் சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் விஜயதசமியையொட்டி அம்பு விடும் விழா நடந்தது.

இங்கு நவராத்திரியையொட்டி 9 நாளும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விஜயதசமி நாளான இன்று மாலை 5:00 மணிக்கு மீனாட்சி அம்மன் குதிரை வாகனத்தில் வில் அம்புகளுடன் எழுந்தருளி தேரடி வீதிகள் வழியாக பவனி வந்தார். மாலை 6:00 மணிக்கு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சிவாச்சாரியார் வில்லில் இருந்து அம்புகளை எய்தார். பக்தர்கள் பக்தி முழக்க கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !