சதுரகிரியில் நவராத்திரி திருவிழா: அம்புவிடும் நிகழ்ச்சியுடன் நிறைவு
ADDED :1452 days ago
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நவராத்திரி திருவிழா நேற்று நடந்த அம்புவிடும் நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
வருடம் தோறும் பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்கும் வகையில் வெகு சிறப்புடன் நடக்கும் நவராத்திரி வழிபாடு கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி நடந்தது. இறுதி நாளான நேற்று அம்மன் அம்புவிடும் விழா நடந்தது. அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளினார். மதியம் 2 மணிக்கு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோயில் வளாகத்தில் அம்மன் வீதிஉலா, மலைவாழ்மக்கள் முளைப்பாரி உலாவும் நடந்தது. பின்னர் ஆனந்தவல்லி அம்மன், அரக்கனை அம்பு எய்து அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாதன், கோயில் பூசாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.