ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உலக அமைதி வேண்டி கோ பூஜை
ADDED :1452 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கனகவல்லிசமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி 5ம் சனிக்கிழமையொட்டி மற்றும் உலக அமைதி வேண்டியும் கோ பூஜை நடந்தது.
உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கனகவல்லிசமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி 5ம் சனிக்கிழமையொட்டி மற்றும் உலக அமைதி வேண்டியும் காலை 7 மணியளவில் கோ பூஜை நடந்தது. அப்போது பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. அதற்கு முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தீபராதனை வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.