உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி உற்ஸவ விழா

ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி உற்ஸவ விழா

வாடிப்பட்டி : வாடிப்பட்டி அடுத்த குட்லாடம்பட்டி ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி உற்ஸவ விழா நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. சனிக்கிழமை இரவு கருடவாகனத்தில் உற்ஸவர் கிராம வீதிகளில் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய பூ மாலையுடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரசாதம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !