ஐப்பசி மாத பிறப்பு: பழநி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1844 days ago
பழநி: பழநி, முருகன் மலைக்கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. மலைக்கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடைபெற்றது. ஆனந்த விநாயகருக்கு கலச நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. பெரியாயுடையார் கோயில். திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி பெருமாள் கோயிலில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் தரிசித்தனர்.