துர்க்கையம்மன் கோவிலில் உலக நலன் வேண்டி சண்டி ஹோமம்
ADDED :1435 days ago
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் உலக நலன் வேண்டி சண்டி ஹோமம் நடந்தது. ஏரிக்கரை துர்க்கையம்மன் கோவிலில் நடந்த உலக நலன் வேண்டியும், கொரோனா தாக்கம் முழுமையாக குறைந்து மக்கள் நலமுடன் வாழ்வதற்காக நடந்த சண்டி ஹோமத்திற்கு, ரவி குருக்கள் தலைமை தாங்கினார். 10க்கும் மேற்பட்ட வேத விற்பண்ணர்கள் தலைமையில் யாக சாலை, வேள்வி மற்றும் கோ பூஜை நடந்தது. தொடர்ந்த, துர்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி மற்றும் திரளான பொது மக்கள் பங்கேற்றனர்.