உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உங்களுக்குத் தெரியுமா

உங்களுக்குத் தெரியுமா


* இரவு 9:00 மணி –  நள்ளிரவு 3:00 மணி வரை நதிகளில் நீராடக் கூடாது. சூரிய, சந்திர கிரகண காலத்திற்கு இந்த விதி பொருந்தாது.
* அமாவாசையன்று  வீட்டில் சமைத்தே சாப்பிட வேண்டும். வெளியிடங்களில் சாப்பிடக் கூடாது. அன்று  அன்னதானம் செய்வது சிறப்பு.
* பிரயாணத்தின் போது காயத்ரி மந்திரம் ஜபிப்பது கூடாது. துாய்மையுடன் கோயில், வீட்டு பூஜையறையில் மட்டுமே ஜபிக்க வேண்டும்.
* தீபாராதனையின் போது சுவாமியின் திருவடிக்கு நான்கு முறையும், முகத்திற்கு ஒரு முறையும் கற்பூரம் காட்டிய பின்னரே முழு உருவத்துக்கு மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.
* பெண்கள் வீட்டில் கோலம் இடாமலும், விளக்கேற்றாமலும் கோயிலுக்கு செல்வது கூடாது.
* எரியும் விளக்கில் எண்ணெய்யைக் கையால் தொடுவதும், அதை தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
* சிவனுக்கு  வில்வம், விஷ்ணுவுக்கு துளசி, விநாயகருக்கு அருகம்புல், பிரம்மாவுக்கு அத்தி இலை சிறப்பானவை.  இதை மாற்றி மற்றவருக்கு வைத்து வழிபடுவது கூடாது.
* பெண்கள் வேல், சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது கூடாது.
* கோயில்களில் சூடம், தீபத்தை கைகளில் ஏற்றி சுவாமிக்கு காட்டுவது கூடாது.
* நைவேத்யமாக படைத்த தேங்காயை சமையலில் சேர்த்து மீண்டும் அந்த உணவை சுவாமிக்கு படைப்பது கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !