காசி பாணலிங்கசுவாமி கோயிலில் திருவாசக முற்றோதல்
                              ADDED :1463 days ago 
                            
                          
                          சத்திரப்பட்டி : ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி காசி பாணலிங்கசுவாமி கோயிலில் உள்ள வேதாந்த மடத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீதத்வ சைதன்யா மகாராஜ் சுவாமிகள் தலைமை வகித்தார். சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம் பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர். முத்து மாடசாமி தலைமை வகித்து தேவார, திருவாசகப் பதிகங்களை பாடினார். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை சத்திரப்பட்டி சேவாபாரதி அமைப்பினர் தலைமையில் செய்தனர்.