பக்தர்கள் கூட்டத்தில், கார் புகுந்ததில் மூன்று பக்தர்கள் உயிரிழப்பு
ADDED :1516 days ago
ராய்ச்சூர் : கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில், கார் புகுந்ததில் மூன்று பக்தர்கள் உயிரிழந்தனர்.
ராய்ச்சூர் லிங்கசகூரை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் மஹாராஷ்டிராவின் ஹுலஜந்தி மகாலிங்கராயா தேர்த்திருவிழாவுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.நேற்று காலை, கர்நாடக - மஹாராஷ்டிரா எல்லையில் உள்ள உமதி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று தாறுமாறாக ஓடி, பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது.இதில், லிங்கசகூர் அருகே உள்ள யாதபாவியை சேர்ந்த பசப்பா உர், 45, தேவரபூசூரை சேர்ந்த நாகப்பா, 40, தேவூராவை சேர்ந்த மகா கணப்பா, 55 ஆகிய மூன்று பேர் உடல் நசுங்கி பலியாயினர். இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் படுகாயமடைந்தார்.