கடலில் கங்கை பூஜை
ADDED :1530 days ago
தினமும் முருகப்பெருமானுக்கு உச்சிக்கால பூஜை முடிந்ததும் ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் புறப்பட்டு கடலில் கரைக்கின்றனர். இதனை கங்கை பூஜை என்கின்றனர். இங்குள்ள சரவணப்பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறுகுழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் வீற்றிருக்கும் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.