தவக்கோலத்தில் முருகன்
ADDED :1462 days ago
சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன் இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் தாமரை மலருடன் சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருக்கிறார். இவரது தவம் கலைந்து விடக் கூடாது என்பதற்காக பக்தர்கள் சுற்றி வர பிரகாரம் அமைக்கப்படவில்லை. உற்ஸவர் சண்முகர் தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரைச் சுற்றி வர பிரகாரம் உள்ளது. மூலவருக்குரிய பூஜை, மரியாதைகள் உற்ஸவருக்கே செய்யப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இவரிடம் வேண்டினால் நல்ல வரன் அமையும்.