உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சலிங்கம் சன்னதி

பஞ்சலிங்கம் சன்னதி


சூரனை வதம் செய்த முருகன் நன்றி தெரிவிக்கும் விதமாக சிவனை பூஜித்தார். இதற்காக முருகன் கையில் தாமரை மலருடன்  சிவயோகியை போல ஜடா மகுடத்துடன் இருக்கிறார். முருகன் சன்னதியின் இடதுபுற சுவரில் சிவலிங்கம் உள்ளது. சிவ லிங்கத்திற்கு தீபாராதனை காட்டிய பிறகே முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும்  பின்புறம் சிவலிங்கம் உள்ளது. இந்த இரு சிவலிங்கங்களை தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். இதைத் தவிர முருகன் சன்னதிக்கு வலது புறத்தில் பஞ்ச லிங்க சன்னதி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !