உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கோவிலில் சூரசம்ஹார திருவிழா

முருகன் கோவிலில் சூரசம்ஹார திருவிழா

கோத்தகிரி: கோத்தகிரி சக்திமலை அருள்மிகு முருகன் கோவிலில், சூரசம்ஹாரம் திருவிழா விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது.

காலை, 8:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, ஸ்கந்த ஹோமம் மற்றும் அபிஷேகம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீ சத்ரு சம்ஹார திரிதசி அர்ச்சனையை தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. பகல், 12: 00 மணிக்கு, சூரசம்ஹாரமும், 1:00 மணிக்கு, திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, ஐயனின் பல்லக்கு வீதியுலா நடந்தது. பகல், 2:00 மணிக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், பஜனை, ஆன்மீக சொற்பொழிவு இடம்பெற்றது. விழாவில், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ சக்தி சேவா சங்க தலைவர் போஜராஜன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !