மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்
ADDED :1462 days ago
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்காரம் நடந்தது. இதில் சூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும், கந்தசஷ்டி விழா மற்றும் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இக்கோவிலில், காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹார நிகழ்ச்சி, இன்று நடைபெற்றது. இதில் சூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.